What Is Holy Bible /பரிசுத்த வேதாகமம் என்றால் என்ன?

What Is Holy Bible/ 

 பரிசுத்த வேதாகமம் என்றால் என்ன? 


வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தரின் வார்த்தைகள் அடங்கிய பரிசுத்த வேதாகமம். இந்த பரிசுத்த வேதாகமம் என்பது கிறிஸ்தவர்களின் உயிர்நாடி. ஏனெனில் நம்முடைய ஆத்துமாவை இரட்சிக்கக்கூடிய திறன் வாய்ந்த வார்த்தைகள் கொண்ட புத்தகமாக நம்முடைய பரலோக தேவன் நமக்குக் கொடுத்தார். அப்படிப்பட்ட இந்த வேதாகமம் இன்றைய காலத்தில் நமக்கு மிகவும் சுலபமாகக் கிடைக்கிறது. இன்னும் சிலர் பிறருக்கு இலவசமாகக் கொடுக்கிறார்கள். மேலும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்று நம் கைபேசிகளில் கூட பரிசுத்த வேதாகமம் இருக்கிறது. 

இன்று நாம் அனைவரும் மிக சுலபமாக வேதாகமத்தை வாசிக்கிறோம் என்றால் அது எளிதான  காரியம் அல்ல. பல நூற்றாண்டுகளாக பலர் பாடுபட்டதினால் தான்  நாம் இப்பொழுது சுலபமாக வேதாகமத்தை வாசிக்க முடிகிறது. 

1.பரிசுத்த வேதாகமம் என்றால் என்ன? 

2.வேதாகமத்தில் உள்ள இரண்டு பகுதிகள் 

3.வேதாகமத்தின் முதல் பகுதி பழைய ஏற்பாடு 

4.வேதாகமத்தின் இரண்டாம் பகுதி புதிய ஏற்பாடு 

5.வேதாகமத்தில் உள்ள  பிரிவுகள்

6.அட்டவணை

பரிசுத்த வேதாகமம் என்றால் என்ன? 
வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தரின் வார்த்தைகள் அடங்கியது பரிசுத்த வேதாகமம். இந்த வேதாகமம் இன்றைக்கு கிறிஸ்தவர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் இது கிறிஸ்தவர்களுக்குரியது மட்டும் அல்ல. கடவுளிடத்தில் இருந்து மனிதர்களுக்குச் சொல்லப்பட்ட செய்திகள் அடங்கிய இந்த வேதாகமம் எல்லா மனிதர்களுக்கும் உரியது. இது ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த வேதநூல் அல்ல.
வேதாகமம் என்ற வார்த்தைக்கு மூலச்சொல் கிரேக்கத்தில் "பிபிலியா "என்ற உச்சரிப்பில் இருந்து வந்தது. இதை ஆங்கிலத்தில்  "Holy Bible"என்று அழைக்கப்படுகிறது. இவ்வார்த்தைக்கு புத்தகம் அல்லது புத்தகங்கள் என்று பொருள். 


வேதாகமத்தில் உள்ள இரண்டு  பகுதிகள் :
இன்றைக்கு நாம் பயன்படுத்தும் வேதாகமம் இரண்டு பகுதிகளைக் கொண்டு இருக்கிறது. அவை பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படும். ஏற்பாடு என்பதற்கு உடன்படிக்கை அல்லது ஒப்பந்தம் என்று அர்த்தமாம்.  பழைய ஏற்பாடு யூதர்களோடு தேவன் செய்து கொண்ட உடன்படிக்கை பற்றிய செய்திகளைக் கொண்டிருக்கிறது. புதிய ஏற்பாடு கிறிஸ்துவானவர் எல்லா உலக மக்களோடும் செய்திருக்கும் புதிய உடன்படிக்கைகளைப் பற்றிய செய்திகளைக் கொண்டிருக்கிறது.  

வேதாகமத்தின் முதல் பகுதி பழைய ஏற்பாடு :

வேதாகமத்தில் மொத்தம் 66 புத்தகங்கள் உள்ளன.அதில் பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்கள் உள்ளது. அவை எபிரேயு, அராபிக் மொழியில் எழுதப்பட்டது.பழைய ஏற்பாட்டில் உலகப் படைப்பைப் பற்றியும், மனித வரலாற்றைப் பற்றியும், தேவனுடைய ஜனங்களுக்குக் கொடுத்த நியாயப்பிரமாணத்தைப் பற்றியும், தேவனைப்புகழ்ந்து பாடிய சங்கீதங்களையும், தேவன் மனிதனுக்குச் சொன்ன நீதி நெறிகளையும்,வருங்காரியங்களைக் குறித்த தீர்க்கதரிசனங்களைப் பற்றியும் எழுதியிருக்கிறது. குறிப்பாக பழைய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவின் வருகையையும் சிலுவைப்பாடுகள் குறித்தும் எழுதியிருக்கிறது. 

வேதாகமத்தின் இரண்டாம் பகுதி புதிய ஏற்பாடு :

வேதாகமத்தில் மொத்தம் 66 புத்தகங்கள் உள்ளன. அதில் புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்கள் உள்ளது. அவை கிரேக்க மொழியில் எழுதப்பட்டு உள்ளது. புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, அவருடைய மரணம், உயிர்த்தெழுதல் ஆகிய சுவிசேஷமும் திருச்சபையின் வரலாறும், திருச்சபைக்கு இறுதிக்காலத்தைப் பற்றிய விழிப்புணர்வு வருவதற்காக எழுதிய நிருபங்கள், இறுதி நாட்களில் இந்த உலகில் சம்பவிக்கும் காரியங்கள் ஆகிய இறுதி வெளிப்பாடும் எழுதப்பட்டுள்ளது.  


வேதாகமத்தில் மொத்த புத்தகங்கள்                  :  66 
பழைய ஏற்பாடு 
புத்தகங்கள்         :  39 
புதிய ஏற்பாடு 
புத்தகங்கள்.           : 27 
வேதாகமத்தில்  உள்ள 
மொத்த அதிகாரங்கள்:   1189
பழைய ஏற்பாட்டில் உள்ள அதிகாரங்கள் : 929 
புதிய ஏற்பாட்டில் உள்ள 
அதிகாரங்கள் : 260 
வேதாகமத்தில் உள்ள மொத்த வசனங்கள் : 31,103
பழைய ஏற்பாட்டில் உள்ள வசனங்கள்  23,145 
புதிய ஏற்பாட்டில் உள்ள வசனங்கள் : 7958 


வேதாகமத்தில் உள்ள மொத்த அதிகாரங்கள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. அவை:
1.வரலாற்று நூல்கள் :
ஆதியாகமம் முதல் எஸ்தர் வரை (17புத்தகங்கள்)
மத்தேயு முதல் அப்போஸ்தலர் வரை (5புத்தகங்கள்)
2.தீக்கதரிசன நூல்கள்:
ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், தானியேல்  
ஓசியா முதல் மல்கியா வரை (12புத்தகங்கள்)
வெளிப்படுத்தின விசேஷம் 
3.கவிதை நடை நூல்கள் :
யோபு, சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு, புலம்பல், ஆபகூக் 
4.கடிதங்கள்:
ரோமர் முதல் பிலேமோன் வரை பவுல் ஒவ்வொரு சபைக்கும் தனிப்பட்ட மக்களுக்கும் எழுதியது. 
எபிரெயர்,
யாக்கோபு முதல் யூதா வரை 
பழைய ஏற்பாட்டின் விளக்கக் கடிதம். 



BookChaptersVersesWordsAuthorGenreOT/NT
1Genesis50153338262MosesLaw
2Exodus40121332685MosesLaw
3Leviticus2785924541MosesLaw
4Numbers36128932896MosesLaw
5Deuteronomy3495928352MosesLaw
6Joshua2465818854UnknownHistory
7Judges2161818966UnknownHistory
8Ruth4852574UnknownHistory
91 Samuel3181025048UnknownHistory
102 Samuel2469520600UnknownHistory
111 Kings2281624513UnknownHistory
122 Kings2571923517UnknownHistory
131 Chronicles2994220365EzraHistory
142 Chronicles3682226069EzraHistory
15Ezra102807440EzraHistory
16Nehemiah1340610480NehemiahHistory
17Esther101675633UnknownHistory
18Job42107018098UnknownPoetry
19Psalms150246142704VariousPoetry
20Proverbs3191515038SolomonPoetry
21Ecclesiastes122225579SolomonPoetry
22Song of Solomon81172658SolomonPoetry
23Isaiah66129237036IsaiahProphecy
24Jeremiah52136442654JeremiahProphecy
25Lamentations51543411JeremiahPoetry
26Ezekiel48127339401EzekielProphecy
27Daniel1235711602DanielProphecy
28Hosea141975174HoseaProphecy
29Joel3732033JoelProphecy
30Amos91464216AmosProphecy
31Obadiah121669ObadiahProphecy
32Jonah4481320JonahProphecy
33Micah71053152MicahProphecy
34Nahum3471284NahumProphecy
35Habakkuk3561475HabakkukProphecy
36Zephaniah3531616ZephaniahProphecy
37Haggai2381130HaggaiProphecy
38Zechariah142116443ZechariahProphecy
39Malachi4551781MalachiProphecy
40Matthew28107123343MatthewGospel
41Mark1667814949MarkGospel
42Luke24115125640LukeGospel
43John2187918658JohnGospel
44Acts28100724229LukeHistory
45Romans164339422PaulLetter
461 Corinthians164379462PaulLetter
472 Corinthians132576046PaulLetter
48Galatians61493084PaulLetter
49Ephesians61553022PaulLetter
50Philippians41042183PaulLetter
51Colossians4951979PaulLetter
521 Thessalonians5891837PaulLetter
532 Thessalonians3471022PaulLetter
541 Timothy61132244PaulLetter
552 Timothy4831666PaulLetter
56Titus346896PaulLetter
57Philemon125430PaulLetter
58Hebrews133036897UnknownLetter
59James51082304JamesLetter
601 Peter51052476PeterLetter
612 Peter3611553
PeterLetter





621 John51052517JohnLetter
632 John113298JohnLetter
643 John114294JohnLetter
65Jude125608JudeLetter
66Revelation2240411952JohnProphecy


Post a Comment

0 Comments