சிலுவையில் இரண்டாம் வார்த்தை /Second Word On Cross /சிலுவை வார்த்தைகள்

சிலுவையில் இரண்டாம் வார்த்தை /Second Word On Cross /சிலுவை வார்த்தைகள் 


The second word spoken by our Lord Jesus Christ on the cross.

Jesus said unto him, Verily I say unto thee, To day shalt thou be with me in paradise.

Luke 23:43

God's salvation is not available for tomorrow, a week, a month or a year.

Jesus calls today to deliver us from sin and the punishment of sin, to give us a new life, to give us hope in our lives that are dying of sin and the power of sin. 

Not only the thief who was dying on the cross, but all who call on him to this day, have the privilege and privilege of being with him.

Luke 15: 7 For I say unto you, That likewise joy shall be in heaven over one sinner that repenteth, more than over ninety and nine just, which need no repentance.


Jesus Christ speaking these words to a repentant sinner Jesus is experiencing great suffering on the cross of Calvary as he speaks these words. 

Comfort him to ease the suffering of Jesus ChristThere are no people out there who speak the words. 

But Jesus Christ speaks words of comfort to the repentant offender. 

No matter how great a sinner is, his sins are forgiven when he confesses his sins and repents and accepts Jesus as his personal Savior. 

And when he dies he finds a place with God in paradise.


Our Lord Jesus Christ tells the repentant sinner when he was dying on the cross of Calvary that you will be with me in paradise today. 

Jesus gave his life to forgive sinners. 

Jesus Christ redeemed his own blood to atone for our sins. 

Calvary also gives his life on the cross to give us eternal life. 

Through his death Jesus opens the door of the kingdom of heaven for us so that all who are saved by confessing their sins and accepting Jesus may enter the kingdom of heaven.

Jesus Christ told us that you would be in paradise with him and that he would go to paradise after he died on the cross of Calvary.We are being clarified. 

Jesus Christ receives the crown through the cross. 

We must understand through the life of Jesus Christ that there is no throne without the cross. 

We cannot attain greatness without experiencing suffering. 

There is no other way than this and we should not be disappointed that we too can go to the crossroads in search of another path.

Through this we can learn the truth that repentant sinners will be with Jesus Christ when they die. 

Paradise will be a garden of happiness, with eternal happiness in heaven. 

Revelation 2: 7 says that the Lord will give the fruit of the tree of life in the midst of this paradise to anyone who conquers God's paradise. 

Only saved believers here will be with Jesus Christ. 

The greatest joy for believers is to be in the community of the Lord in heaven. 

Believers are privileged to go to this place as soon as they die. 

The repentant sinner is added to the resting place by Jesus Another unrepentant The culprit is added to eternal hell. 

If we continue in the experience of repentance we will surely go to hell if we die if there is a repentant experience in our lives that will take us to a place of rest even if we die today. 

Heaven ...? 

Hell ....? 

It is up to us to decide what we want.

If anyone reading this has lost the love of this classic Nazareth, this Jesus is able to give you and me back the lost joy and peace. 

If we had rejected him and left him, this voice would have come to us today. 

Will we, too, realize our sin and look to Jesus hanging on the cross?

 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில்  பேசிய இரண்டாம் வார்த்தை .

 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 

லூக்கா 23:43

தேவனுடைய இரட்சிப்பு என்பது நாளைக்கோ, ஒரு வாரம் விட்டோ, ஒரு மாதம் விட்டோ, ஒரு வருடம் விட்டோ கிடைப்பது கிடையாது. 

 பாவத்தில் இருந்தும், பாவத்தின் தண்டனையிலிருந்தும், விடுதலை கொடுக்க, நமக்கு ஒரு புது வாழ்வை கொடுக்க, பாவத்தினாலும், பாவத்தின் வல்லமையினாலும் மரித்துக்கொண்டிருக்கிற நம்முடைய வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையை தர இயேசு இன்று அழைக்கிறார். சிலுவையில் மரித்துக்கொண்டிருந்த கள்ளனுக்கு மாத்திரமல்ல இன்றைக்கும் அவரை நோக்கி கூப்பிடுகிற அனைவருக்கும், அவரோடு கூட இருக்கும்படியான பாக்கியம், சிலாக்கியம் கிடைக்கிறது. 

 லூக்கா 15:7 அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 

மனம் திரும்பிய குற்றவாளியிடம் இயேசுகிறிஸ்து இந்த வார்த்தைகளை பேசிக்கொண்டிருக்கிறார் இந்த வார்த்தைகளை இயேசு பேசிக்கொண்டிருக்கும்போது கல்வாரி சிலுவையில் மகா வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் வேதனையைக் குறைப்பதற்கு அவருக்கு ஆறுதலான வார்த்தைகளை பேசும் நபர்கள் அங்கு எவரும் இல்லை. ஆனால் இயேசு கிறிஸ்து மனம் திரும்பிய குற்றவாளிக்கு ஆறுதலான வார்த்தைகளை பேசுகிறார். ஒருவன் எவ்வளவு பெரிய பாவம் செய்த பாவியாக இருந்தாலும் அவன் தன்னுடைய பாவங்களை அறிக்கையிட்டு மனந்திரும்பி இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டவுடன் அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. அத்துடன் அவன் மரிக்கும்போது தேவனுடன் பரதீசியில் அவனுக்கு ஒரு இடமும் கிடைக்கிறது.


 இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் மரித்து கொண்டிருக்கும்போது மனம் திரும்பிய குற்றவாளிக்கு கூறுகிறார். பாவிகளை மன்னிப்பதற்காகவே இயேசு தம்முடைய ஜீவனை ஒப்புக் கொடுக்கிறார். நமக்கு பாவ மன்னிப்பு உண்டு பண்ணுவதற்காக இயேசு கிறிஸ்து தம்முடைய சொந்த ரத்தத்தை கிரையமாக கொடுக்கிறார். நமக்கு நித்தியஜீவன் அளிப்பதற்காகவும் கல்வாரி சிலுவையில் தன்னுடைய ஜீவனை கொடுக்கிறார். தங்களுடைய பாவங்களை அறிக்கையிட்டு மனம் திரும்பி இயேசுவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்டவர்கள் எல்லோரும் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க வேண்டும் என்பதற்காக இயேசு தம்முடைய மரணத்தின் வழியாக பரலோக ராஜ்யத்தின் வாசலை நமக்காக திறக்கிறார்.

நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று இயேசுகிறிஸ்து கூறுவதன் மூலமாக அவர் கல்வாரி சிலுவையில் மரித்த பின்பு பரதீசுக்கு போவார் என்பது நமக்குத் தெளிவு படுத்தப்படுகிறது. சிலுவை பாதை வழியாக இயேசு கிறிஸ்து கிரீடத்தை பெற்றுக் கொள்கிறார். சிலுவை இல்லாமல் சிங்காசனம் இல்லை என்பதை நாம் இயேசு கிறிஸ்துவின் ஜீவியத்தின் வழியாக புரிந்து கொள்ள வேண்டும். பாடுகளை அனுபவிக்காமல் மேன்மை அடைய முடியாது நாம் நம்முடைய கிரீடத்தை பெற்றுக்கொள்வதற்கு சிலுவைப் பாதை மட்டுமே நியமிக்கப்பட்டு இருக்கிறது. இதைத்தவிர வேறு பாதை இல்லை நாமும் வேறு பாதை தேடி குறுக்குவழியில் சென்று அடையலாம் என்று ஏமாற்றத்தை அடையக்கூடாது.


மனம் திரும்பிய பாவிகள் மரிக்கும்போது இயேசு கிறிஸ்துவோடு கூட இருப்பார்கள் என்னும் சத்தியம் இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும். பரலோகத்தில் நித்திய சந்தோஷம் இருக்கும் பரதீசு என்றால் மகிழ்ச்சியான தோட்டம் என்று பொருள். இது தேவனுடைய பரதீசு ஜெயம் கொள்கிறவன் எவனோ அவனுக்கு இந்த பரதீசின் மத்தியில் இருக்கிற ஜீவ விருட்சத்தின் கனியை கர்த்தர் புசிக்கக் கொடுப்பார் என்று வெளிப்படுத்தின விசேஷம் 2:7 கூறுகிறது. இங்கு இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் மட்டும் இயேசு கிறிஸ்துவோடு கூட இருப்பார்கள். விசுவாசிகளுக்கு பரலோகத்தில் கர்த்தருடைய சமூகத்தில் இருப்பதே மிகப்பெரிய சந்தோஷம். விசுவாசிகள் மரித்த உடனே இந்த இடத்திற்கு போவதற்கு சிலாக்கியம் பெற்றிருக்கிறார்கள். மனம் திரும்பிய குற்றவாளி இயேசுவினால் இளைப்பாறும் இடத்தில் சேர்க்கப்படுகிறான் மனம் திரும்பாத மற்றொரு குற்றவாளி நித்திய நரகத்தில் சேர்க்கப்படுகிறான். நாம் மனம் திரும்பின அனுபவத்தில் தொடர்ந்து நீடித்தால் இன்றைக்கு மரித்தாலும் இளைப்பாறும் இடத்திற்கு கொண்டு போய் விடப்படும் நம்முடைய வாழ்வில் மனம் திரும்பாத அனுபவம் இருக்கும் பட்சத்தில் நாம் மரித்தால் நிச்சயமாக நரகத்திற்கே செல்வோம் . பரலோகமா...? நரகமா....? எது வேண்டும் என்று நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

 ஒரு வேளை இதை வாசிக்கிற யாராவது, இந்த உன்னதமான நேசரின் அன்பை இழந்திருப்பீர்களானால், இழந்துப்போன சந்தோஷத்தை, சமாதானத்தை, உங்களுக்கும் எனக்கும் மறுபடியும் கொடுக்க இந்த இயேசு வல்லவர். அவரை மறுதலித்து அவரை விட்டு பின் வாங்கிப் போயிருப்போமானால், இன்று இந்த குரல் நம்மை நோக்கி வருகிறது."இன்று"இன்றைக்கே உன்னுடைய வாழ்க்கையில், குடும்பத்தில், படிப்பில், தொழிலில், உன்னுடைய பெலவீனத்தில், நோய்களில், உனக்கு ஒரு முழு நிச்சயத்தை, நம்பிக்கையை கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறார். நாமும் நமது பாவத்தை உணர்ந்து சிலுவையில் தொங்கும் இயேசுவை நோக்கி பார்ப்போமா? 


Post a Comment

0 Comments