சிலுவையில் முதலாவது வார்த்தை/first word on cross /சிலுவை வார்த்தைகள்


சிலுவையில் முதலாவது வார்த்தை/first word on cross  /சிலுவை வார்த்தைகள் 


 Let us meditate on the first word spoken by the Lord Jesus on the cross who suffered on the cross of Calvary and shed His blood.

Then Jesus said unto them, Father, forgive them; for they know not what they do. 

They parted his garments and cast lots.

Luke 23:34

You can see the sublime love of Jesus manifested there while suffering while hanging on the cross. 

We see the love of Jesus interceding for enemies and foes. 

Jesus' prayer for those who hate and torment him makes us ecstatic, even while experiencing terrible suffering. 

We see the divine love that filled his heart manifest in the form of the Word. 

Jesus' love did not change even under the terrible circumstances of revenge, hatred, rage, and hysteria.

I tell you, love your enemies, bless those who curse you, do good to those who hate you, and pray for those who condemn you and persecute you.

Matthew 5:44

According to this verse he has lived his life as one who loves enemies, who blesses those who curse, who does good to those who hate, and who prays for those who blaspheme and persecute.

Jesus came into the world to redeem sinners. 

Jesus was the one who expressed his love on the cross of Calvary by saying that he loves sinners.

Jesus is not only a God who prays for the people who have persecuted him but also a God who feels sorry for them. 

They do not know what they are doing.Luke 23:34

They do not know that love is perfect. 

They do not realize that any act contrary to love is dangerous. They do not know that what they do against Jesus will bring them destruction. 

Jesus who knew that was a God who felt sorry for them.



Jesus was crucified for our sins. Our sins fell on Him. 

He was beaten, found, shed His blood, and crucified for the sins we have committed. 

The love of Jesus, who loved us so much that he sacrificed his life for us and transformed us sinners into His children, is incomparable.



Are we ready to love Jesus when he tells us I love you? 

In Jesus' unconditional love we find peace, joy, security, and blessing in all. 

May God protect and bless us as we live a life of witnessing to Him as His beloved children, never forgetting in our lives the love of Jesus who forgives all our sins and intercedes for us with God our Father ...


கல்வாரி சிலுவையில் பாடுகள் அனுபவித்து தன்னுடைய இரத்தத்தை சிந்தி ஆண்டவராகிய இயேசு சிலுவையில் பேசிய முதலாவது வார்த்தையை தியானிப்போம். 

அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். 

லூக்கா 23:34

சிலுவையில் தொங்கிக் கொண்டு பாடுகளை அனுபவிக்கின்ற வேளையில் இயேசுவின் உன்னதமான அன்பு அங்கே வெளிப்படுவதைப்பார்க்க முடிகிறது. பகைவர்களுக்காகவும் விரோதிகளுக்காகவும் பரிந்து பேசுகிற இயேசுவின் அன்பைப் பார்க்கிறோம். கொடிய வேதனைகளை அனுபவிக்கின்ற வேளையில் கூட தன்னை பகைக்கிற வேதனைப்படுத்துகிறவர்களுக்காக இயேசு  ஜெபிக்கிற ஜெபம் நம்மைப் பரவசமடையச் செய்கிறது. அவருடைய இருதயத்தில் நிறைந்திருந்த தெய்வீக அன்பு வார்த்தையின் வடிவாக வெளிப்பட்டதை நாம் பார்க்கிறோம். பகை, வெறுப்பு, மூர்க்கம், வெறிச்செயல் நிறைந்தவர்களாக  தம்மைப்பழி வாங்கும் கொடூரமான சூழ்நிலையில் கூட இயேசுவின் அன்பு மாறவேயில்லை. 

 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். 

மத்தேயு 5:44

இந்த வசனத்தின்படி சத்துருக்களை சிநேகிப்பவராகவும், சபிக்கிறவர்களை ஆசிர்வதிக்கிறவராகவும், பகைஞருக்கு நன்மை செய்கிறவராகவும், நிந்திக்கிறவர்களுக்காகவும், துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபிக்கிறவராகவும் தம்முடைய வாழ்வில் வாழ்ந்து காட்டியிருக்கிறார். 

பாவிகளை மீட்கவே இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். பாவிகளை நேசிக்கிறேன் என்று உரைத்த இயேசு தன்னுடைய நேசத்தை கல்வாரி சிலுவையில் வெளிப்படுத்துகிறவராக இருந்தார்.நாமும் அவரைப்போல நம்மை விரோதிப்பவர்களை நேசித்து வாழ வேண்டும். 

இயேசு தன்னை துன்பப்படுத்திய ஜனங்களுக்காக வேண்டுதல் செய்கிறவராக மட்டுமல்ல அவர்களுக்காக பரிதபிக்கிற கடவுளாயிருக்கிறார்.  தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.லூக்கா 23:34

அன்பு பூரணமானது என்பதை அவர்கள் அறியவில்லை. அன்பிற்கு விரோதமான எந்த செயலும் ஆபத்தானது என்று அவர்கள் உணரவில்லை.இயேசுவிற்கு விரோதமாக அவர்கள் செய்யும் செயல்கள் அவர்களுக்கு அழிவைக் கொண்டுவரும் என்பதை அவர்கள் அறியவில்லை. என்பதை அறிந்திருந்த இயேசு அவர்களுக்காக பரிதபிக்கிற கடவுளாயிருக்கிறார். 

நம்முடைய பாவங்களுக்காகத்தான் இயேசு சிலுவையில் அறையப்பட்டார்.நம்முடைய பாவம் அவர்மேல் விழுந்தது. நாம் செய்த பாவங்களுக்காக அவர் அடிக்கப்பட்டு, காணப்பட்டு, இரத்தம் சிந்தி, சிலுவையில் அறையப்பட்டார்.  நமக்காக அவர் தன்னை ஜீவபலியாகக் ஒப்புக் கொடுத்து பாவிகளாகிய நம்மை அவருடைய பிள்ளைகளாக மாற்றும்படி நம்மீது அன்பு கூர்ந்த இயேசுவின் அன்பு இணையற்றது.

நான் உன்னை நேசிக்கிறேன் என்று இயேசு நம்மிடத்தில் கூறும்பொழுது அவரிடம் அன்பு செலுத்த நாம் ஆயத்தமாய் இருக்கிறோமா? இயேசுவின் ஈடுஇணையில்லாத அன்பில் நமக்கு சமாதானம், சந்தோசம், பாதுகாப்பு, ஆசீர்வாதம் என அனைத்தும் நமக்குக் கிடைக்கும். நம்முடைய எல்லா பாவங்களையும் மன்னித்து நமக்காக நமது பிதாவாகிய தேவனை நோக்கி வேண்டுதல் செய்து நமக்காகப் பரிந்து பேசுகிற இயேசுவின் அன்பை நம் வாழ்வில் ஒருநாளும் மறவாமல் அவருக்குப் பிரியமான பிள்ளைகளாக அவருக்கு சாட்சியான வாழ்க்கையை நாம் வாழும் பொழுது தேவன் நம்மைப் பாதுகாத்து வழிநடத்தி ஆசிர்வதிப்பாராக... 




Post a Comment

0 Comments