BIOGRAPHY Of SADHU SUNDAR SING /சாது சுந்தர் சிங்கின் வாழ்க்கை வரலாறு

 BIOGRAPHY Of SADHU SUNDAR SING /சாது சுந்தர் சிங்கின் வாழ்க்கை வரலாறு 



 Sundar Singh popularly known as Sadhu Sundar Singh was born on 3rd September 1889 in Rampur, Punjab. His parents were Sikhs. His mother was very devout in her religious faith. She loved her son very much and wanted him to become a devout Sadhu. 

.From his youth, Sundar studied the holy books of Hinduism, especially the Bhagavad Gita. He started memorizing it when he was seven years old. Often after everyone in the house had gone to sleep, he would subtly read the Sikh holy book of the Granth, or the Hindu scriptures, or the Muslim holy book of the Qur'an. Contentment in the spiritual life 

A longing to see gripped Sundar.


Meeting Christ


His first contact with Christianity was in the village mission school where Sundar was studying. When he was asked to read a verse from the Bible, he publicly tore it up and became the leader of all the students who opposed Christianity.Soon he left the mission school and joined the government school. Many times he provoked miscreants to throw stones or mud at the missionaries who were preaching on the street or in the open. Apart from that, he also burnt the New Testament publicly in front of many people.


At one point he was confused. He decided to either find true peace or take his own life by jumping in front of a train passing by his house. One day at three in the morning he got up and took a shower and said, "God, if there is a real God, show me." 

He began to pray that you would give me the way of salvation and peace. Immediately there was a flash of light in that room. In it he saw the likeness of Jesus Christ whom he hated so much. He showed Sundar his hand full of nails and why do you make me suffer?

He said I am your savior. Then Sundar's heart was filled with great joy. He felt that the spiritual thirst that had been gnawing in his life till then was quenched. His whole life changed. No one could make him doubt or change him from this great ecstatic experience.


call

Having this new experience, Sundar immediately went to his father and told him that he had become a Christian. But then his entire family was shocked to see Sundar's decision to become a Christian. Sundar was kicked out of the house. 

He had no food to eat or shelter to stay in. He slept under a tree. Then he was taken back into the house. But he was given food outside the house. He was allowed to stay with humble companions. However, with perfect joy in his heart, he patiently accepted anything for Jesus Christ. 

.However, the Lord, who loved him, freed him from death to fulfill his will in Sundar.

Then he went to stay with the missionaries in Ludhiana. He started learning the scriptures. Sundar was baptized in Shimla on his 16th birthday. After deep thought and fervent prayer, Sadhu Sundar Singh committed himself completely to the hands of Christ. He became a Christian Sadhu. 

He left for Christ who conquered him in a situation where there was no human help. He accepted the verse in his life as the goal of his life: "That I may not glorify anything other than the cross of our Christ Jesus Christ. Through him the world has been crucified to me. I have also been crucified to the world." (Galatians 6:14) 

Jesus Christ sacrificed himself because of the love in him. In the same way, I should sacrifice myself because of my love for Jesus Christ. 

There is a saying.

Sundar in Nepal


Nepal is another country located in the northern part of India. During the time of Sadhu Sundar Singh, it was forbidden to preach the gospel here. Sundar went to Nepal and preached Christ there. So he was arrested and imprisoned. He told other prisoners about Christ in the jail. He spent his time not telling about Christ. So he was alone 

They locked him in a small room. It was a cowshed. They stripped him of his clothes, tied his hands and feet to a pole and bit the cards on him. They soaked his blood. He became weak. Even in that great agony, he began to pray to God and praise Him. 

They thought that he was not alive and released him immediately. Although he was in a weak state with blood absorbed by the cards, he again went to the neighboring town and stood on the street and started preaching the gospel. 

Sundar would say that the secret of my great joy is that I sing for Jesus Christ, my savior, in all the suffering that befell him.

His call to the world




His sufferings and his unique experiences soon came to the attention of the outside world. The thoughts of the Christian people in many parts of the world began to be impressed on this Indian apostle. Calls to preach to Christians and others came to him from all parts of India. Wherever he went, he hated himself and took up his cross. 

He said that it was a call to follow and a missionary call. His missionary call inspired many to pray and act. He preached in Ceylon, Burma, Malaya, China, Japan. He also went to England, America, Australia and some other European countries to give the gospel. 

Although I am fully aware of the dangers involved, I am traveling to Tibet today because I must fulfill my duty to the full. 

He had written in a note to Tibet. The time had passed for him to go to Tibet and come back. But he did not come.No news was received from him. Perhaps he died while passing the mountain peaks on his journey, or was put to sleep in a deep well, or tied and rolled up in the wet hide of a yak buffalo and died as a blood witness with his bones broken. 

The only certainty is that he received his crown of life.

சாது‌ சுந்தர் சிங் என்று அழைக்கப்படும் சுந்தர் சிங் 1889ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ராம்பூர் என்ற இடத்தில் பிறந்தார்.அவர் பெற்றோர் சீக்கிய மார்க்கத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தனர்.அவருடைய தாயார் மத நம்பிக்கையில் மிகவும் பக்தி நிறைந்தவராய் இருந்தார்.தன் மகனை மிகவும் அதிகமாக நேசித்து அதிலே ஒரு பக்தி நிறைந்த சாதுவாக மாறவேண்டும் என்று விரும்பினார்.இளமைப் பருவத்திலிருந்தே சுந்தர் இந்து மார்க்கத்தின் புனித நூல்களை குறிப்பாக பகவத்கீதையை ஆய்ந்து படித்தார்.அவர் ஏழு வயதாக இருக்கும் பொழுது அதை மனப்பாடம் செய்யவும் ஆரம்பித்தார்.அநேக நேரங்களில் வீட்டில் உள்ள அனைவரும் நித்திரைக்குச் சென்ற பிறகு சீக்கியர்களின் புனித புத்தகமாகிய கிரந்தத்தையோ அல்லது இந்து மத நூல்களையோ அல்லது முஸ்லீம்களின் புனித நூலான குர்அனையோ நுட்பமாகப் படிப்பார்.ஆவிக்குரிய வாழ்க்கையில் திருப்தி காண வேண்டும் என்ற வாஞ்சை சுந்தரைப் பற்றிக் கொண்டது.

கிறிஸ்துவை சந்தித்தல் 


சுந்தர் படித்துக் கொண்டிருந்த கிராமத்து mission பள்ளிக்கூடத்தில் தான் முதன்முதலாக அவருக்கு கிறிஸ்தவ மார்க்கத்தோடு தொடர்பு ஏற்பட்டது.வேதபுத்தகத்திலிருந்து வசனத்தை வாசிக்கச் சொன்ன பொழுது அதை பகிரங்கமாகக் கிழித்து எறிந்ததன் மூலம் கிறிஸ்து மார்க்கத்தினை எதிர்க்கும் எல்லா மாணவர்களுக்கும் அவர் தலைவரானார்.விரைவில் அவர் அந்த mission பள்ளிக்கூடத்தை விட்டு அரசு பள்ளிக்கூடத்தில் போய் சேர்ந்தார்.பல சமயங்களில் தெருவில் அல்லது திறந்த வெளியில் நின்று பிரசங்கி கற்கும்  மிஷனரிகள் மீது கற்களையோ அல்லது சேற்றையோ‌ எடுத்து வீசும் படியாக முரடர்களை அவர் தூண்டி விடுவதும் உண்டு.அதுமட்டுமல்லாமல் அவர் புதிய ஏற்பாட்டைப் பகிரங்கமாகப் பலர் முன்னிலையில் தீயிட்டுக் கொளுத்தியதும் உண்டு.

ஒரு கட்டத்தில் அவர் குழப்பமாகக் காணப்பட்டார்.உண்மையான சமாதானத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்  அல்லது தன் வீட்டிற்கு பக்கத்தில் கடந்து செல்லும் ரயில் முன் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று உறுதி பூண்டார்.ஒரு நாள் அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் அவர் எழுந்து குளித்துவிட்டு கடவுளே உண்மையான கடவுள் ஒன்று உண்டு என்றால் உம்மை எனக்குக் காண்பியும். இரட்சிப்பிற்குரிய வழியையும்,சமாதானத்தையும் நீர் எனக்குத் தர வேண்டும் என்று வேண்டுதல் செய்ய ஆரம்பித்தார்.உடனே அந்த அறையில் ஒரு பேரொளி வீசியது.அதில் அவர் மிகவும் வெறுத்து வந்த இயேசு கிறிஸ்துவின் சாயலைக் கண்டார்.அவர் தமது ஆணிகள் பாய்ந்த கரத்தை சுந்தருக்குக் காண்பித்து நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? நான் உன்னுடைய இரட்சகர் என்று சொன்னார்.அப்பொழுது சுந்தரின் இருதயம் மாபெரும் மகிழ்ச்சியால் நிரம்பியது.அது வரை தன் வாழ்க்கையில் நாடித் தவித்துக் கொண்டிருந்த ஆவிக்குரிய தாகமும் தணிந்ததை அவர் உணர்ந்தார்.அவர் வாழ்க்கை முழுவதும் மாறியது.அவர் அடைந்த இந்த மகத்தான பரவசமான அனுபவத்திலிருந்து அவரைச் சந்தேகப்பட வைக்கவோ அல்லது மாற்றவோ யாராலும் முடியவில்லை.

அழைப்பு

இவ்விதமான இந்தப் புதிய அனுபவத்தைப் பெற்ற சுந்தர் உடனடியாக தனது தந்தையிடம் சென்று தான் ஒரு கிறிஸ்தவனாகி விட்டதைக் கூறினார்.ஆனால் பிறகு அவருடைய குடும்பம் முழுவதுமே சுந்தர் கிறிஸ்தவனாக மாறுவதற்கு எடுத்த தீர்மானத்தைக் கண்டு அதிர்ச்சியுற்றது.சுந்தர் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டார். உண்பதற்கு உணவோ, தங்குவதற்கு உறைவிடமோ இல்லை.மரத்தடியில் உறங்கினார்.பிறகு மீண்டும் வீட்டிற்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.ஆனால் வீட்டிற்கு வெளியில் வைத்து உணவு கொடுக்கப்பட்டது.தாழ்த்தப்பட்ட வேளையாட்களோடு அவர் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டார்.என்றாலும் மனதிலே பரிபூரண மகிழ்ச்சியோடு இயேசு கிறிஸ்துவுக்காக எதையும் பொறுமையோடு ஏற்றுக் கொண்டார்.கடைசியாக நஞ்சு கொடுக்கப்பட்டு வீட்டிலிருந்தே துரத்தப்பட்டு நோய்வாய்ப்பட்டார்.இறக்கும் நிலையையும் அடைந்தார்.என்றாலும் அவரிடம் அன்பு கொண்ட ஆண்டவர் தம் சித்தத்தை சுந்தரிலே நிறைவேற்ற மரணப்பிடியிலிருந்து விடுவித்தார்.

பின்னர் லூதியானாவில் இருந்த மிஷனரிகளிடம் சென்று அவர்களோடு தங்கினார்.வேதவசனங்களைக் கற்க ஆரம்பித்தார்.சுந்தர் தம் 16ஆம் பிறந்த தினத்தன்று சிம்லா நகரத்தில் ஞானஸ்நானம் பெற்றார்.ஆழமான சிந்தனைக்கும் உறுதியான ஜெபத்திற்கும் பின்னர் சாது சுந்தர் சிங் தன்னைப் பரிபூரணமாக கிறிஸ்துவின் கரத்தில் அர்ப்பணித்தார்.அவர்‌ஒரு கிறிஸ்தவ சாதுவாக மாறினார்.வெறும் கால்களோடும் கையில் ஏந்திய வேதபுத்தகத்தின் பகுதியான புதிய ஏற்பாட்டோடும் எந்தவிதமான மனிதரின் உதவியும் இல்லாத நிலைமையில் தன்னை ஆட்கொண்ட கிறிஸ்துவுக்காக அவர் புறப்பட்டுச் சென்றார்.நானோ நம்முடைய கிறிஸ்துவாகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக .அவரால் உலகம் எனக்குச் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது.நானும் உலகத்திற்கு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்.(கலாத்தியர்.6:14)என்ற வசனத்தைத் தன்னுடைய வாழ்க்கையில் குறிக்கோளாக அவர் ஏற்றுக்கொண்டார்.என் மீது உள்ள அன்பினால் இயேசு கிறிஸ்து தம்மை தியாகம் பண்ணினார்.அதைப்போலவே நானும் இயேசு கிறிஸ்துவின் மேல் உள்ள என்னுடைய அன்பினால் என்னைத் தியாகம் செய்ய வேண்டும் என்று அடிக்கடி கூறுவது உண்டு.


நேபாளத்தில் சுந்தர்

இந்தியாவின் வட பாகத்தில் அமைந்திருக்கும் இன்னொரு நாடு நேபாளம்.சாது சுந்தர் சிங் காலத்தில் இங்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.சுந்தர் நேபாளத்திற்குச் சென்று அங்கு கிறிஸ்துவை பிரசங்கித்தார்.அதனால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.சிறையில் இருந்த மற்ற கைதிகளுக்கு அவர் கிறிஸ்துவைப் பற்றிக் கூறினார்.கிறிஸ்துவைப்பற்றிக் கூறுவதில்லை தம் நேரத்தைப் போக்கினார்.எனவே அவரைத் தனியாக ஒரு சிறிய அறையில் அடைத்து விட்டார்கள்.அது ஒரு மாட்டுக் கொட்டகையாக இருந்தது.அவரது ஆடைகளைக் களைந்து, கைகளையும் கால்களையும் ஒரு கம்பத்தில் கட்டி அவர் மீது அட்டைகளை கடிக்க விட்டார்கள்.அவை அவருடைய இரத்தத்தை உறிஞ்சியது.பலம் குன்றிப் போனார்.என்றாலும் அந்த அதிகமான வேதனையிலும் கடவுளிடம் ஜெபிக்கவும் அவரைத் துதிக்கவும் ஆரம்பித்தார்.அதைப்பார்த்த அதிகாரிகள் அவருக்குப் புத்தி சுவாதீனம் இல்லை என்று எண்ணி உடனடியாக விடுதலை செய்தார்கள்.அட்டைகளினால் இரத்தம் உறிஞ்சப்பட்டு பலவீனமான நிலையில் இருந்த போதிலும் மறுபடியும் பக்கத்தில் இருந்த ஊருக்குச் சென்று தெருவில் நின்று நற்செய்தியை அறிவிக்க ஆரம்பித்தார்.அவருக்கு நேரிட்ட எல்லா துன்பத்திலும் என்னுடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவுக்காக நான் பாடு அனுபவிப்பது ஒரு மாபெரும் மகிழ்ச்சியின் இரகசியம் என்று சுந்தர் கூறுவார்.

உலகத்திற்கு அவரது அறைகூவல்


அவர் பட்ட பாடுகளும் அவரது ஒப்பற்ற அனுபவங்களும் விரைவில் வெளி உலகின் கவனத்திற்கு வந்தது.உலகின் பல பாகங்களிலும் உள்ள கிறிஸ்தவ மக்களின் சிந்தை இந்த இந்திய அப்போஸ்தலர் மீது பதிய ஆரம்பித்தது.கிறிஸ்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பிரசங்கிக்க வேண்டும் என்ற அழைப்பு அவருக்கு இந்தியாவின் எல்லா பாகங்களிலுமிருந்து வந்தது.அவர் சென்ற இடங்களில் எல்லாம் தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக் கொண்டு சிலுவை நாதரைப் பின்பற்ற வேண்டும் என்பதையே அறைகூவலாகவும் மிஷனரி அழைப்பாகவும் கூறினார்.இவரது மிஷனரி அறைகூவல் அநேகரை ஜெபிப்பதற்கும் செயல்படுவதற்கும் தூண்டி விட்டது.சிலோன்,பர்மா,மலேயா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்று பிரசங்கித்தார்.மேலும் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா இன்னும் ஒரு சில ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று நற்செய்தி வழங்கினார்.பிரயாணத்தின் கடினத்தையும் அதில் ஏற்படவிருக்கும் அபாயங்களையும் நான் முழுமையாக உணர்கிறபோதிலும் நான் இன்றைக்கு திபெத் நோக்கிப் பிரயாணம் செல்கிறேன்.ஏனென்றால் நான் என்னுடைய கடமையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று 1929ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ம் தேதி தன்னுடைய நண்பர்களுக்கு எழுதிய குறிப்பில் எழுதியிருந்தார்.திபெத் சென்று விட்டுத் திரும்பி வருவதற்கான சமயம் கடந்து விட்டது.ஆனால் அவரோ வரவில்லை.எந்தவிதமான செய்தியும் அவரிடத்தில் இருந்து கிடைக்கவில்லை.ஒருவேளை அவர் பிரயாணத்தில் மலைச் சிகரங்களைக் கடந்து செல்லும் போது இறந்திருக்கலாம்.அல்லது ஒரு ஆழமான கிணற்றில் தூங்கிப் போடப்பட்டிருக்கலாம்.அல்லது யாக் என்னும் எருமையின் நனைந்த தோலுக்குள்ளாக வைத்துக் கட்டப்பட்டு சுருட்டப்பட்டு அவருடைய எலும்புகள் முறிக்கப்பட்ட நிலையில் ஓர் இரத்த சாட்சியாக மரித்திருக்கலாம்.அவரது முடிவு எப்படியாக இருந்தாலும் இந்தியாவின் அப்போஸ்தலராகிய சாது சுந்தர் சிங் தனது ஜீவ கிரீடத்தைப் பெற்றுக் கொண்டார் என்பது மட்டும் உறுதியானது.


Post a Comment

0 Comments