மேரி ஸ்லெஸ்ஸரின் வாழ்க்கைப் பயணம் /The Life Journey of Mary Slessor

 மேரி ஸ்லெஸ்ஸரின் வாழ்க்கைப் பயணம் /The Life Journey of Mary Slessor




மழை பெய்து கொண்டிருந்தது வீதி வழியே நடந்து சென்று கொண்டிருந்த பதினாறு வயது நிரம்பிய பெண்ணொருத்தியை கயமை குணம் கொண்ட சில பையன்கள் தொடர்ந்து சென்றனர்.சீக்கிரமாக நடந்து சென்று அவளை சுற்றிலும் நின்று கொண்டு அவளை பலவந்தம் பண்ணினர் குழுத்தலைவர் கையில் ஈயக்குண்டுகள் கொண்ட நீள சவுக்கு ஒன்றைப் பிடித்துக் கொண்டு முன்னால் வந்து நின்றான்.அங்கு‌ என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பில் நிசப்தம் நிலவிய குழுத்தலைவன் அச்சவுக்கை தலைக்கு மேல் சுற்றிக் கொண்டு "நீ ஞாயிறு பள்ளி நடத்துவதை விட்டு விட்டு எங்களை தனிமையாக இருக்க விடு.இல்லையென்றால் ஞாயிறு பள்ளி நடத்துவதையே மறக்கச் செய்துவிடுவோம்". என அவன் பயமுறுத்தினான்.மற்றவர்கள் அவளைப் பார்த்து கேலியாக சிரித்திருக்கலாம்.ஆனால் அச்சிறுபெண்ணோ அவ்விடத்தை விட்டு அசையாமல் நின்று கொண்டு"உங்களால் முடிந்ததை நீங்கள் செய்யலாம்"என அவர்களின் பயமுறுத்தலுக்கு பதிலளித்தாள்.அந்த‌ ஈயக்குண்டு பொதிந்த சவுக்கு அவளின் தலைக்கு அருகில் வந்தாலும் அவள் பயப்படாமல் அங்கேயே நின்றிருந்தாள்.தேவனுடைய வேலையைச் செய்வதால் தேவன் அவளைப் பாதுகாப்பார் என அவளுக்குத் தெரியும்.தாழ்ந்த பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கு அவள் வேதபாடம் நடத்தி வந்தாள்.அப்பையன்கள் கோபமடைந்து வேதபாட வகுப்புகளை நிறுத்த முயற்சி செய்தனர்.அவளின் அஞ்சாமையைக் கண்ட அவர்களுக்கு அவள்மேல் நன்மதிப்பு ஏற்படவே, விரைவில் அவர்களும் அவர்களின் வேதபாட வகுப்பிற்குச் சென்றனர்."ஆப்பிரிக்காவின் வெள்ளை அரசி"என அழைக்கப்பட்ட தைரியசாலியான மேரி ஸ்லெஸ்ஸரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?இன்று நாம் இந்த அம்மையாரைப் பற்றித் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.


இளமைப் பருவம்:

ஸ்காட்லாந்து நாட்டில் டிசம்பர் மாதம் 2ஆம் தேதி,1848ஆண்டு மேரி மிட்ஷெல் ஸ்லெஸ்ஸர் பிறந்தார்.அவருடைய பெற்றோர் மிகவும் வறியவர்.மேலும் குடும்பத்தில் ஏழு குழந்தைகளைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு இருந்தது.மேரி, பதினாறு வயதாகும் பொழுதே குடும்பத்திற்கு உதவியாயிருப்பதற்காக தனது தாயாருடன் துணி ஆலை ஒன்றில் வேலை செய்ய ஆரம்பித்தாள்.அவளுக்கு14வயதாகும் போது காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை வேலை செய்ய அவள் பழக்கப்பட்டிருந்தாள்.இரவுப்பள்ளி ஒன்றிற்கு சென்று தனது படிப்பைத் தொடர்ந்து செய்து வந்தாள்.அவளுக்கு ஓய்வெடுக்க மற்றும் பொழுது போக்க நேரம் இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை.அவள் சிறு வயதாக இருக்கும் போதே அவரின் அண்டை வீட்டில் வாழ்ந்த ஒரு வயதான அம்மையார் ஒருவர் மீது பரிவு கொண்டு இயேசுகிறிஸ்துவைப்பற்றியும் அவரின் இரட்சிப்பைப்பற்றியும் அவளுக்குக் கூறினார்.மேரிக்கு இது மிகுந்த ஆர்வத்தை தூண்டியது.அவள் இயேசிவை இரட்சகராக ஏற்றுக் கொண்டாள்.அவள் சபை நடவடிக்கைகளில் உற்சாகத்துடன் ஈடுபட்டு ஞாயிறு பள்ளியிலும் கற்பித்து வந்தாள்.

அவளின் பெற்றோர்:

அவளின் தகப்பனார் குடிகாரனாக இருந்தது மட்டுமன்றி அடிக்கடி குடித்துவிட்டு அவளின் தாயாரை அடிப்பது வழக்கம்.சில சமயங்களில் அவர் மேரியின் மீதும் கோபப்பட்டு அவளை வீட்டை விட்டு வெளியே துரத்தி விடுவார்.மேரி அழுதுகொண்டே வீதியில் சுற்றித் திரிவாள்.அவளுடைய மனநிலை எப்படியிருந்திருக்கும்?அவள் தனிமையாக விரக்தியுடன் தன்னை வேண்டுவார் யாருமில்லையென்றும் நம்பிக்கையற்றும் உணர்ந்திருக்கக்கூடும்.இருப்பினும்அவள் இயேசுவை நேசித்து அவருக்காக வாழ்ந்து வந்தாள்.

ஆனால் அவளின் தாயாரோ ஒரு அருமையான கிறிஸ்தவர்.அவர் அடிக்கடி குழந்தைகள் அனைவரையும் கூட்டி அவர்களுக்கு இயேசுவைப் பற்றியும் இயேசுவைப் பற்றி அறியாத ஏழை ஆப்பிரிக்கக் குழந்தைகளைப்பற்றியும் கூறுவதுண்டு.மேரி மிகவும் கவனமாக அக்கதைகளைக் கேட்டாள்.

அவள் தன் தாயாரிடம் "நான் மிஷனரியாகப் போய் அந்த ஆப்பிரிக்கப் பையன்களுக்கும் பெண்களுக்கும் கற்பிப்போம்".என்று கூறியபோது அவளின் கண்கள் ஆவலாய் பிரகாசமாய் காணப்படும்.அவள் அவளது விளையாட்டு நேரங்களில் கூட ஆப்பிரிக்கக் குழந்தைகள் இருப்பது போல் கற்பனை செய்து அவர்களுக்கு இயேசுவைப் பற்றியும் அவர் அவர்களை இரட்சிக்க விரும்புகிறார் என்றும் அவர் அவர்களின் பரலோகத் தந்தை என்றும் கூறுவாள்.வீட்டில் இருந்த எல்லாக் குழந்தைகளுக்கும் ஆப்பிரிக்காவின் மீது ஒரு தனி ஆர்வமிருந்தது.அவளுடைய மூத்த சகோதரர் இராபர்ட் ஆப்பிரிக்காவிற்கு மிஷனரியாய் செல்லத் தீர்மானித்தார்.அவரின் தாயாருக்கோ அளவிலடங்கா மகிழ்ச்சி.ஆனால் துரதிஷ்டவசமாக இராபர்ட்டும் அவரது தகப்பனாரும் மற்றொரு சகோதரனும் விரைவில் மரித்துப் போனதால் இருபது வயதாக இருக்கும் போதே குடும்பத்தினரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மேரி மீது விழுந்தது.அவளால் அவளால் அதை எப்படி செய்ய முடியும்?இது இயலாத ஒரு காரியம்.ஆனால் மேரிக்கோ இயேசு தன்னோடு இருக்கிறாரென்றும் அவர் உதவி செய்வாரென்றும் தெரியும்.அவள் தனிமையாக இல்லை.இயேசு அவளுடன் இருக்கிறார் என்கிற உணர்வு அவளுக்கு திடமளித்தது.

மேரி ஆப்பிரிக்காவிற்கு எங்ஙனம் சென்றாள்?

ஆப்பிரிக்காவிற்குச் செல்ல வேண்டும் என்ற தனது விருப்பத்தை மேரி மறந்து விடவேயில்லை.ஆப்பிரிக்க குடிசைகள் மற்றும் ஆப்பிரிக்க மக்களைப் பற்றிய தரிசனம் அவளை விட்டு அகலவே இல்லையெனினும்,அவள் தனது சொந்தப் பட்டணத்திலேயே தனது காரியங்களில் மிகவும் உண்மையுள்ளவளாக இருந்தாள்.

ஒரு நாள் ஆப்பிரிக்கக் கண்டத்திலே மிஷனரியாக ஊழியம் செய்த டேவிட் லிவிங்ஸ்டன் மரித்துப் போனார் என அவர்கள் கேள்விப்பட்டனர்.அவருக்குப் பதிலாக யார் செல்லுவார் என அனைவரும் கேட்கத் துவங்கினர்.தான் ஆப்பிரிக்காவுக்கு செல்ல வேண்டுமென தேவன் விரும்புகிறார் என்று மேரி தன் இருதயத்தில் உணர்ந்தாள்.மேரியின்‌‌ முடிவைக் கேட்ட தாயாருக்கு மிகுந்த சந்தோஷம்.மேரி‌ தனது விருப்பத்தை மிஷனரி ஸ்தாபனத்திற்கு தெரிவித்ததுடன் அவர்கள் அவளை மகிழ்ச்சியுடன் மிஷனரியாக ஏற்றுக் கொண்டு, ஆப்பிரிக்காவில் உள்ள காலாபார் என்ற இடத்திற்கு அவரை அனுப்பினர்.காலாபார் தற்போது நைஜீரியாவில் உள்ளது.1876ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவுக்குச் செல்ல கப்பலேரினார்.அவளின் நண்பர்களிடமும்,வீட்டாரிடமும் விடைபெற்றுக் கொண்ட போது அவரது உள்ளம் ஆவலோடும்,எதிர்பார்ப்போடும் ததும்பியது.அவரோடு கப்பற்பயணம் செய்த மற்றொரு நண்பர் ஆப்பிரிக்காவின் அடர்ந்த காடுகள் மலையிலிருந்து பாய்ந்து வரும் ஆறுகள் ஆகியவற்றைக் கூறிய போது மேரிக்கு அவையனைத்தும் வியப்பூட்டுவனவாக இருந்தது.

மேரி கண்ட ஆப்பிரிக்கா எங்ஙனமிருந்தது?

கப்பல் ஆப்பிரிக்காவிலுள்ள ட்யூக் என்ற இடத்தை அடைந்தது.அங்கு மேரி நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தார்.அவள் என்னென்ன காரியங்கள் செய்தார் என்று தெரியுமா? புதிய பாஷை கற்றல், அங்குள்ள மக்களை அறிந்து கொள்ளல், அங்குள்ள குழந்தைகளுடன் நட்போடு பழகுதல் ஆகியவற்றை அவர் மகிழ்ச்சியுடன் செய்து வந்தார்.வேறு யாருமே சென்று இயேசுவைப் பற்றி அறிவிக்காத ஆப்பிரிக்காவின் உட்பகுதிகளுக்குச் செல்ல மேரி விரும்பினார்.

ஆப்பிரிக்காவில் ஆண்கள் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளை அடிமைகளாக விற்று வந்தனர்.மேலும் அவர்கள் மிக மோசமாக நடத்தப்பட்டனர்.மேலும் ஆப்பிரிக்க மக்கள் மரங்களிலும் மரங்களிலும் குளங்களிலும் தீய ஆவிகள் வாழ்கிறதென்று எண்ணி அவைகளுக்கு மிகவும் பயந்திருந்தனர்.அவர்களில் அநேகர் நரமாமிசபட்சிணிகளாகவும் காணப்பட்டனர். மேலும் இம்மக்கள் இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் அவர்கள் தீய ஆவியால் அனுப்பப்பட்ட சாபமென நம்பினர்.அக்குழந்தைகள் மிருகத்தனமாக கொலை செய்யப்பட்டனர்.இப்படிப்பட்ட மக்களுக்கு இயேசுவின் அன்பைப் பகிர்ந்து கொள்ள மேரியின் உள்ளம் பாரத்தால் நிறைந்தது.


'ஸ்லெஸ்ஸர் அம்மா' என்று மக்கள் அவரை ஏன் அழைத்தனர்?

மேரிக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.ஒரு நாள் அவர் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததைக் கேள்விப்பட்டார்.அவ்வீட்டிற்கு‌ விரைந்து சென்று அக்குழந்தைகளைக் காப்பாற்றினார்.இருப்பினும் அக்குழந்தையின் உறவினர்கள் அவரைத் தொடர்ந்து சென்று ஆண்குழந்தையை திருடிச் சென்று விட்டனர்.அந்தப் பெண் குழந்தையை மேரி தத்து எடுத்துக் கொண்டார்.மேரி எல்லா விதத்திலும் அம்மக்களைப் போலவே வாழ்ந்து வந்தார்.அம்மக்களை‌ நேசித்து அவர்களுக்கு கற்றுக் கொடுக்கவும் உடைகள் தைத்துக் கொடுக்கவும் செய்தார்.எனவே தான் அவரை மக்கள் அனைவரும் 'ஸ்லெஸ்ஸர் அம்மா 'என அன்புடன் அழைத்தனர்.

அவர் ஆப்பிரிக்காவின் உட்பகுதிகளுக்குச் சென்ற விதம்:

ஆப்பிரிக்காவின் உட்பகுதிகளுக்குச் செல்ல வேண்டுமென மேரிக்கு ஆசை இருந்தது.அங்கிருந்த மக்கள் கொடியவர்களும்,பயங்கரமானவர்களுமாயிருந்தனர்.அங்கு செல்வது அபாயகரமானதால் மேரியை அனுப்பிய மிஷன் நிர்வாகத்தினர் அவரை அங்குச் செல்வது அபாயகரமானதால் மேரியை அனுப்பிய மிஷன் நிர்வாகத்தினர் அவரை அங்குச் செல்ல வேண்டாமெனக் கூறினார்.ஆனால் மற்ற நண்பர்களுடன் அவ்விடத்திற்குச் சென்ற மேரி, தான் ஒரு பெண்ணாக இருப்பதால் அவ்விடத்தவர் அவரை ஏற்றுக் கொள்வார் என உறுதியாக நம்பினார்.ஆகவே தனது 3ஆப்பிரிக்கப் பையன்களுடனும்,ஒரு பெண் பிள்ளையுடனும், ஒரு குழந்தையுடனும் அவ்விடத்திற்குச் சென்றார்.ஓகோயாங் என்ற இடத்திற்குச் சென்று அவரும் அவரது குழந்தைகளும் சேர்ந்து மூங்கிலால் குடிசை ஒன்றைக் கட்டி அதில் வாழ்ந்து ஆலயம் ஒன்றையும் கட்ட முற்பட்டனர்.அங்குள்ளப் பெண்களுக்கு சமையல்,தையல், வாசித்தல்,எழுதுதல் ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்ததுமன்றி இயேசுவைப் பற்றியும் மேரி அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்.மேரி ஸ்லெஸ்ஸர் தன் முழு இருதயத்தோடும் எவ்விதத் தடையும் இன்றி ஆண்டவருக்கென ஊழியம் செய்ய விரும்பினார்.

அவரின் பாரபட்சமற்ற குணத்தையும் சரியாகத் தீர்ப்பு செய்யும் ஆற்றலையும் கண்ட ஆங்கில அரசு அவரை ஓகோயாங் பட்டணத்தின் ஆங்கிலேய அரசாங்கத்தின் பிரதிநிதியாக நியமித்தது.நீதிமன்றத்தில் தேங்கியிருந்த அநேக வழக்குகளை மேரி தீர்த்து வைத்தார்.அவரை 'வெள்ளை அரசி 'என மக்கள் அழைத்தனர்.

மேரி ஸ்லெஸ்ஸரின் கடைசிக் காலம்:

மேரி ஸ்லெஸ்ஸர் நோய்வாய்ப்பட்டு ஸ்கார்ட்லாந்து திரும்பிச் செல்ல நேர்ந்தாலும் குணமான உடனே ஊழியத்தை தொடர ஆப்பிரிக்காவிற்குச் சென்று விட்டார். ஆங்கிலேய அரசு அவரை முதற் பெண் நீதிபதியாக நியமித்தது.அது மிகவும் உயர்ந்த மதிப்பிற்குரிய பதவியாகும்.மேரி நீதிபதியானதும் தன்னுடைய பதவியை உபயோகித்து ஆப்பிரிக்க மற்றும் ஆங்கிலேய மக்கள் இயேசுவைத் தங்கள் இரட்சகராக அறிந்து கொள்ளச் செய்தார்.இங்கிலாந்தின் அரசர் அவரது உயர்ந்த சேவையைப் பாராட்டி 'வெள்ளிச் சிலுவை 'என்ற உயிரிய விருதினை அவருக்களித்தார்.இக்காலகட்டத்தில் மேரி வயது சென்றவரானாலும் ஆப்பிரிக்காவிலேயே ஊழியம் செய்து அங்கேயே மரிக்கவும் விரும்பினார்.அவர் தம் 67ஆவது வயதில் ஜனவரி மாதம் 13ஆம் தேதி 1915ஆம் ஆண்டு காலமானார்.


ஆப்பிரிக்காவில் ஊழியம் செய்த மேரி ஸ்லெஸ்ஸரைப் பற்றி எத்தனை பேர் அறிந்திருந்தனர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அநேகர் அவரைப் பற்றி அறிந்திராவிட்டாலும் அவரைப் பற்றி ஆண்டவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.தேவன் அவரது இடைவிடா முயற்சிகளையும் அன்பினையும் தியாகத்தையும் பார்த்தார்.எனவே, நீங்கள் அவருக்காகச் செய்யும் அனைத்தையும் பார்த்து தேவன் உங்களை மிகவும் ஆசீர்வதித்து உங்களுக்குரிய பலனை நிச்சயம் கொடுப்பார்.ஆமேன்...

The Life Journey of Mary Slessor


It was raining and a sixteen-year-old girl was walking down the street when a group of boys followed her. 

The leader of the group wrapped the scarf over his head and said, "Leave you Sunday school and leave us alone. Otherwise we will make you forget about Sunday school." 

he threatened. The others might have laughed at her. But the little girl stood there motionless and replied to their threats, "You can do what you can." Even as the leaden whip came near her head, she stood there without fear. She knew that God would protect her because she was doing God's work. 

.She used to teach scriptures to children living in the slums.The Appians were enraged and tried to stop the scripture classes. Seeing her fearlessness, they gained respect for her, and soon they too went to their scripture classes. Have you heard of the courageous Mary Slessor, who was called the "White Queen of Africa"? Today we are going to learn about this lady.


Adolescence:


Mary Mitchell Slessor was born in Scotland on December 2nd, 1848. Her parents were very poor and had the responsibility of supporting seven children in the family. At the age of sixteen, Mary started working with her mother in a textile mill to support the family. 

She was used to working till six in the evening.She went to a night school and continued her studies. Do you think she would have had time to relax and have fun? 

Of course not. When she was very young, an elderly woman who lived next door took pity on her and told her about Jesus Christ and his salvation. This aroused great interest in Mary. She accepted Jesus as her savior. She enthusiastically participated in church activities and taught in Sunday school.


Her parents:


Not only was her father an alcoholic, he often got drunk and beat her mother. Sometimes he even got angry with Mary and kicked her out of the house. Mary wandered the streets crying. What would her state of mind have been like? She would have felt lonely and desperate and hopeless. However, she loved Jesus and lived for Him. 

But her mother was a wonderful Christian. She often gathered all the children together and told them about Jesus and about the poor African children who did not know about Jesus. Mary listened to the stories very carefully.


When she told her mother, "I will go as a missionary and teach those African boys and girls," her eyes would light up with eagerness. Even in her playtime she would imagine there were African children and tell them about Jesus and that He wanted to save them and that He was their heavenly Father. 

All the children had a special interest in Africa. Her older brother Robert decided to go to Africa as a missionary. Her mother was overjoyed. But unfortunately Robert, her father and another brother died soon after and the responsibility fell on Mary to save the family at the age of twenty. How could she do it? 

?It was an impossible task. But Mary knew that Jesus was with her and that He would help her. She was not alone.

She was strengthened by the feeling that Jesus was with her.


How did Mary get to Africa?


Mary never forgot her desire to go to Africa. Although the vision of African huts and African people never left her, she was very faithful to her work in her native town.


One day, they heard that David Livingston, who served as a missionary in the African continent, had died. Everyone started asking who would replace him. Mary felt in her heart that God wanted her to go to Africa. Mary's mother was very happy to hear Mary's decision. After Mary informed the missionary establishment of her desire, they 

They happily accepted her as a missionary and sent her to Calabar in Africa. Calabar is now in Nigeria. She set sail for Africa in 1876. Her heart was filled with excitement and anticipation as she said goodbye to her friends and family. 

RiversMary was amazed by all of them when told.



What was Africa like when Mary saw it?



The ship reached Duke, Africa, where Mary worked for four years. Do you know what she did? 

She enjoyed learning a new language, getting to know the people there, and making friends with the children there. Mary wanted to go to the interior of Africa where no one else had gone and preached about Jesus.



In Africa, men sold women and young children as slaves and they were treated very badly. African people were very afraid of evil spirits living in trees, trees and ponds. Many of them were also seen as cannibals. 

And these people believed that if twins were born, they were cursed by an evil spirit. The children were brutally murdered. Mary's heart was filled with burden to share the love of Jesus to such people.

Why did people call her 'Slesser's mother'?


Mary is very fond of children. One day she heard that twins were born. She rushed to the house and saved the children. However, the baby's relatives followed her and stole the baby boy. Mary adopted the baby girl. Mary lived like a mother in every way. She loved her mother and gave them to her. 

She used to teach and sew clothes. That's why people affectionately called her 'Slesser Amma'.


How he went into the interior of Africa:


Mary had a desire to go to the interior of Africa. The people there were deadly and dangerous. The mission authorities who sent Mary told her not to go there because it was dangerous to go there. But Mary went there with other friends and the people would accept her because she was a woman. 

So he went there with his 3 African boys, a daughter and a child. He and his children went to a place called Okoyang and together they built a bamboo hut and lived in it. 

Mary also taught them. Mary Slessor wanted to serve the Lord with all her heart and no inhibitions.

Seeing her impartial character and ability to judge correctly, the English government appointed her as the representative of the English government in the city of Okoyang. Mary settled many pending cases in the court. People called her the 'White Queen'.


Mary Slessor's Last Period:


Mary Slessor fell ill and had to return to Scotland, but soon after she recovered she went to Africa to continue her ministry. 

The British government appointed her as the first female judge. It is a highly respected position. Mary Judge also used her position to make the African and English people know Jesus as their savior. The King of England gave her a living award called 'Silver Cross' in appreciation of her high service. At this time, Mary was old and still in Africa. 

He wanted to serve and die there. He died on 13th January 1915 at the age of 67.

How many people do you think knew about Mary Slessor who ministered in Africa? 

Although many people did not know about him, the Lord knew him very well. God saw his unceasing efforts, love and sacrifice. Therefore, seeing all that you do for Him, God will bless you greatly and reward you. Amen...

Post a Comment

0 Comments