பரிபூரணரே,உம் பக்தனை பரிசுத்தமாக்கும்/O perfect one, make your devotee holy

 பரிபூரணரே,உம் பக்தனை பரிசுத்தமாக்கும்/O perfect one, make your devotee holy



வெளி.4:8;15:3-4


சிலர் கடவுள் புலனறிவுக்கு‌ அப்பாற்பட்டவர்,அதனால் அவரை மனித வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என்று சொல்லுகிறார்கள்.வேறு சிலர் எப்படி வேண்டுமானாலும் கடவுள் இருக்கலாம்,அவர் யாராகவும் இருக்கலாம் என்று அவரை நடைமுறை வாழ்க்கைக்குரிய ஒரு சாதாரண மனிதராக நினைக்கிறார்கள்.ஆனால் வேதாகமம் கடவுளை விவரிக்கும் விதத்தைப் பற்றி பார்க்கும் பொழுது அவர் புலனறிவிற்கு அப்பாற்பட்டவர் என்பதும் அதே சமயம் அவர் ஒரு சாதாரண மனிதனைப் போல நம்முடைய வாழ்க்கையில் ஈடுபடுபவர் என்பதும் சந்தேகத்திற்கிடமின்றி விளங்குகிறது.

வேதாகமம் தேவனை இவ்வளவு தெளிவாக விளக்குவதன் காரணம் என்ன? மக்கள் தாங்கள் எப்படி கடவுள்களாக மாற வேண்டும் என்று தெரிந்து கொள்ள முயற்சிக்காமல் தாங்கள் எப்படி ஒரு தெய்வீக வாழ்க்கையை வாழ வேண்டும்.இதுதான் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்.கடவுள் புலனறிவிற்கு அப்பாற்பட்டவர் என்று மக்கள் நினைக்கும் பொழுது நாம் வாழ்வதற்கு மிகவும் அவசியமான சத்தியம், புனிதத்தன்மை, மற்றும் அன்பு ஆகியவற்றின் முன்மாதிரியாக அவரைப் பார்க்க வழியில்லை.ஆனால் அதே சமயம் கடவுள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்,யாராகவும் இருக்கலாம் என்று நினைத்தால் அவர்களுடைய நம்பிக்கை சிதற அதிகமாக வாய்ப்பு இருக்கிறது.

ஒரு கிராமத்தில் ஒரு கல்லை பலரும் வழிபட்டு வந்தனர்.அதற்கென்று அவர்கள் எந்தப் பெயரும் வைக்கவில்லை ஒருநாள் ஒரு காகம் அந்தக் கல்லின் மேல் எச்சம் போட்டு விட்டது.அதற்குப் பொறுப்பாயிருந்த பூசாரிக்குப் பெருத்த ஏமாற்றமாகி விட்டது.ஏனென்றால் அவர் வணங்கிய கல்,அந்தக் காகத்திற்கு முன்னால் வலிமையற்றுக் காணப்பட்டது.அதனால் அவர் நம்பிக்கை இழந்து விட்டார்.அந்தக் கல்லைத் தூர எறிந்து விட்டார்.

நல்ல வேளை நம் வேதாகமத்தின் தேவன் மர்மங்களின் குவியலின் கீழ் புதைக்கப்படவில்லை.பத்துக் கற்பனைகளை இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்த உடனேயே கர்த்தர் மோசேக்கும் அவனோடே வந்த இஸ்ரவேலருடைய மூப்பருக்கும் தம்முடைய மகிமையையும் வல்லமையையும் வெளிப்படுத்தினது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? (யாத்திராகமம் 24). இப்படி அவர்களுக்கு தரிசனம் கொடுத்ததன் மூலம் தேவன் மக்களுக்குச் சொல்ல விரும்புவது என்னவென்றால் நான் யார் என்று பாருங்கள்.நான் சொல்வதைச் செய்யுங்கள்.நன்கு வரையறுக்கப்பட்ட குணநலன்களைக் கொண்ட ஒரு கடவுளால் மட்டுமே இப்படிச் சொல்ல முடியும்.நாம் பரிசுத்தமாயிருக்க வேண்டும் என்று தேவன் நமக்குக் கட்டளையிடுகிறார்.உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர்,ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று சொல்லுகிறார்.(லேவியராகமம்19:2).தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகளாக இருப்பதினால் (வெளிப்படுத்தல் 15:3)நியாயம் தண்ணீரைப் போலவும் நீதி வற்றாத நதியைப் போலவும் புரண்டு வரக்கூடாது(ஆமோஸ் 5:24) என்று அவர் நமக்கு வலியுறுத்துகிறார். தேவன் மேலும் சொல்லுகிறார்,என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல;உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.பூமியைப் பார்க்கிலும் வானம் எப்படி உயர்ந்திருக்கிறதோ அப்படியே உங்கள் வழிகளைப் பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.(ஏசாயா 55:8-9).அன்பே கடவுள் என்று பல மதங்கள் கற்பிக்கின்றன.ஆனால் நம் தேவன் தம்முடைய அன்பை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.பூர்வமுதல் கர்த்தர் எனக்குத் தரிசனமானார் என்பாய்;ஆம் அநாதி சிநேகத்தால் உன்னை சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக் கொள்ளுகிறேன்.மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன்,நீ கட்டப்படுவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமியா 31:3-4).

இப்படிப்பட்ட தேவன் உங்களை அழைக்கிறார்.அவரைத் தொழுதுகொள்ளச் சொல்கிறார்.அவர் வழிகளில் நடக்கச் சொல்கிறார்.அவர் அழைப்புக்குச் செவி கொடுப்பீர்களா?


ஜெபம் 🙏

தேவனே, உம்முடைய ,மகிமை ,ஞானம் ,வல்லமை, சத்தியம், பரிசுத்தம் இவைகளை நான் போற்றுகிறேன்.உம்மைப் பற்றிய அறிவில் வளரவும், உம்முடைய குமாரனைப் போலவே மாறவும் எங்களுக்கு உதவி செய்யும்.ஆமேன்...


O perfect one, make your devotee holy

Rev. 4:8; 15:3-4


Some people say that God is beyond understanding and therefore cannot be described by human words. Others think that God can be any way, and that He is just an ordinary human being who lives a practical life. 

It is beyond doubt that he is involved in our lives like a human being.

Why does the Bible explain God so clearly? 

People are not trying to figure out how to become gods, but how to live a godly life. This is what they need to know. When people think that God is beyond comprehension, there is no way to see him as an example of the truth, holiness, and love that we so desperately need to live. But the same. 

If they think that God can be anything and anyone, their faith is more likely to be shattered.

Many people were worshiping a stone in a village. They did not give any name to it. One day a crow left its residue on the stone. The priest who was responsible for it became very disappointed. Because the stone he worshiped was found weak in front of that crow. So he lost faith. He threw the stone away. 

He threw it away.

Fortunately, the God of our Bible is not buried under a pile of mysteries. Do you remember that right after the Ten Commandments were given to the people of Israel, the Lord revealed His glory and power to Moses and the elders of Israel who came with him? 

(Exodus 24). 

What God wants to tell the people by giving them this vision is to see who I am. Do what I say. Only a God with well-defined character traits can say this. God commands us to be holy. I, the Lord your God, am holy, so be holy too.(Leviticus 19:2). He urges us that because God's ways are righteous and true (Revelation 15:3), justice should not overflow like water and righteousness like a never-ending river (Amos 5:24). 

God also says, My thoughts are not your thoughts; your ways are not my ways, says the Lord. As the heavens are higher than the earth, so are my ways higher than your ways, and my thoughts higher than your memories. (Isaiah 55:8-9). Many religions say that God is love. 

teach. But our God shares his love with us. From the beginning the Lord appeared to me saying; Yes, I loved you with eternal love; 

Therefore I will draw you with mercy. I will bind you again, and you will be bound, says the Lord (Jeremiah 31:3-4).


Such a God is calling you. He is telling you to worship him. He is telling you to walk in his ways. Will you heed his call?

Prayer

God, I adore Your glory, wisdom, power, truth, and holiness. Help us to grow in knowledge of You and become like Your Son. Amen...

Post a Comment

0 Comments