பரிசுத்தம் என்றால் என்ன?/What is holiness?
Holiness is making choices to have the Holy Spirit with us.
Holiness is sanctification through the atonement of the Lord Christ, putting aside our natural qualities.
"Every moment of our life should be holy to the Lord."
Deuteronomy: 28:9
*When you keep the commandments of the Lord your God and walk in His ways, the Lord will establish you as a holy people to Him, just as He commanded you.*
When we read about the blessings the Lord gave to his children through Moses, in today's scripture we read that when you obey the Lord's commandments and walk in His ways, He will establish you as His holy people. Yes, the Lord's desire is for us to obey His words and live a holy life.
Let's look at the important words in today's Bible passage in their Hebrew translation.
Note the word abide. Abide means to abide in Hebrew. The Lord Jesus said, abide in me, and I will abide in you (John 15:4).
So those who are holy to God means those who abide in God.
Second, look at the word keep. In English, the word keep is used. In Hebrew, it has many meanings, such as follow, protect, care.When we heed and obey the Lord's words, they protect us. Do you know what kind of protection?
Protection like protecting a person who has fallen into water without knowing how to swim from drowning..
Thirdly, notice the word when it happens.. It uses a word that means to grow in Hebrew. So what does Deuteronomy 28:9 teach us?
The holy people of the Lord are those who protect themselves by the words of the Lord, who grow in His ways through the words of the Lord. They are the ones who abide in the Lord, and the Lord will come and dwell in His holy people!
Children of God, white clothes, the church we go to, or the work we do in the church do not make us holy. The more time we spend in God's words in our lives, the more it will sanctify us.
(Romans 6,1-10, Colossians 2:12) God will burn us in a strong fire so that we become gold. We must yield to it.
Our purification is very necessary. We must continue to purify our lives every day until the end of our lives. Holiness grows through the word and living in it. Holiness has no end. The end is placed in heaven. We should not strive to live like other saints. God has a uniqueness for us. We can live as holier than others.
If we surrender our life in the hands of the Lord, the Lord will surely lead.
உபாகமம்:28:9
*நீ உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டு அவர் வழிகளில் நடக்கும் போது,கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே, உன்னைத் தமக்குப் பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார்.*
கர்த்தர் மோசேயின் மூலமாக தம்முடைய பிள்ளைகளுக்கு கொடுத்த ஆசீர்வாதங்களைப்பற்றி நாம் படிக்கும் போது இன்றைய வேதவசனத்தில் கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டு அவர் வழிகளில் நடக்கும் போது, உன்னைத் தமக்குப் பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார் என்று வாசிக்கிறோம்.ஆம், நாம் அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்படிந்து பரிசுத்தமாக வாழ வேண்டும் என்பதே ஆண்டவருடைய விருப்பம்.
இன்றைய வேதாகம பகுதியில் உள்ள முக்கியமான வார்த்தைகளை அதன் எபிரேய மொழியாக்கத்தில் பார்க்கலாம்.
நிலைப்படுத்துவார் என்ற வார்த்தையை கவனியுங்கள்.நிலைப்படுதல் என்பது எபிரேய மொழியில் நிலைத்திருத்தல் என்று பொருள் தரும்.கர்த்தராகிய இயேசு சொன்னார்,என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்.என்று (யோவான்:15:4)
அப்படியானால் கர்த்தருக்குப் பரிசுத்தமானவர்கள் என்பவர்கள் கர்த்தரில் நிலைத்திருப்பவர்கள் என்று அர்த்தம்.
இரண்டாவதாக கைக்கொண்டு என்ற வார்த்தையைப் பாருங்கள்.ஆங்கிலத்தில் keep என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.எபிரேய மொழியில் பின்பற்றுதல்,பாதுகாத்தல்,கவனித்தல் போன்ற பல அர்த்தங்கள் உள்ள வார்த்தை அதற்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.நாம் கர்த்தருடைய வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்து பின்பற்றி நடக்கும் போது அவை நம்மைப் பாதுகாக்கும்.எப்படிப்பட்ட பாதுகாப்பு தெரியுமா? நீச்சல் தெரியாமல் தண்ணீரில் விழுந்துவிட்ட ஒருவனை மூழ்கி விடாமல் பாதுகாப்பது போன்ற பாதுகாப்பு..
மூன்றாவதாக நடக்கும் போது என்ற வார்த்தையை கவனியுங்கள்.. இதற்கு எபிரேய மொழியில் வளருதல் என்ற அர்த்தம் உள்ள வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.அப்படியானால்உபாகமம்28:9வாசித்த வசனம் நமக்கு என்ன கற்பிக்கிறது?.
கர்த்தருடைய பரிசுத்த ஜனங்கள் என்பவர்கள் கர்த்தருடைய வசனங்களால் தம்மை பாதுகாத்துக் கொள்ளுபவர்கள், கர்த்தருடைய வார்த்தைகள் மூலமாக அவருடைய வழிகளில் வளருபவர்கள்.அவர்கள் கர்த்தரில் நிலைத்திருப்பவர்கள்,கர்த்தரும் தம்முடைய பரிசுத்த ஜனங்களிடம் வந்து வாசம் செய்வார் என்பதே!
தேவனுடைய பிள்ளைகளே வெண்மையான ஆடைகளோ,நாம் செல்லும் ஆலயமோ, அல்லது நாம் ஆலயத்தில் செய்யும் வேலைகளோ நம்மை பரிசுத்தவான்களாக்கிவிடாது.நம்முடைய வாழ்வில் நாம் எவ்வளவு நேரம் கர்த்தருடைய வார்த்தைகளில் தரித்திருக்கிறோமோ அவ்வளவு தூரம் அது நம்மை பரிசுத்தப்படுத்தும்.
(ரோமர் 6,1-10,கொலேசியர் 2:12)தேவன் நம்மை பலமான அக்கினியில் புடமிடப்பட நாம் பொன்னாக விளங்குவோம்.அதற்கு நாம் வளைந்து கொடுக்க வேண்டும்.
நம் சுத்திகரிப்பு மிக அவசியம்.அனுதினமும் வாழ்வின் இறுதிவரை நம்முடைய வாழ்வில் சுத்திகரிப்பு நடந்து கொண்டே இருக்க வேண்டும்.பரிசுத்தம் வசனத்தினாலும் அதில் வாழ்வதினாலும் வளர்கிறது.பரிசுத்தத்திற்கு முற்றுப்புள்ளி கிடையாது.பரலோகத்தில்தான் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.நாம் மற்ற பரிசுத்தவான்களைப்போல வாழவேண்டி அதற்கு பிரயாசப்படக் கூடாது.நமக்கென்று தேவன் ஒரு தனித்தன்மை வைத்திருக்கிறார்.நாம் மற்றவர்களை விட பரிசுத்தமுள்ளவர்களாக வாழலாம்.நம்முடைய வாழ்க்கையை கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுத்தால் கர்த்தர் நிச்சயம் நடத்துவார்.
0 Comments
Thank you for visit my page 🙏