பரிபூரணரே உம் பக்தனை பரிசுத்தமாக்கும்

 பரிபூரணரே உம் பக்தனை பரிசுத்தமாக்கும்

Paripurana will make your devotee holy


Some people say that God is beyond comprehension and therefore cannot be described by human words. Others think that God can be any way, and that He is just an ordinary person with a practical life. 
It is clear that he is involved in our life like manitar.

Why does the Bible explain God so clearly? 
People should try to know how to live a godly life instead of trying to figure out how to become gods. This is what they need to know. When people think that God is beyond comprehension, to see him as an example of truth, holiness and love that we need to live. 
There is no way. But at the same time, if they think that God can be whatever they want, their faith is more likely to crumble.

Many people used to worship a stone in a village. No name was given to it. One day a crow left its residue on the stone. The priest who was responsible for it became a big disappointment. Because the stone he worshiped was found weak in front of that crow. So he lost faith. The stone was far away. 
He threw it away.

Fortunately, the God of our Bible is not buried under a pile of mysteries. Immediately after giving the ten visions to the people of Israel, the Lord revealed his glory and power to Moses and the elders of Israel who came with him (Exodus 24). 
What God wants to tell people by giving them a vision like this is, see who I am and do what I say. Only a God with well-defined characteristics can say this. God commands us to be holy. He says, "I, the Lord your God, am holy, so be holy." 
Leviticus 19:2). Because God's ways are righteous and true (Revelation 15:3). Justice flows like water and justice like a never-ending river (Amos 5:24). 
He advises us. God also says my memories are not your memories; 
Your ways are not my ways, says the Lord. As the heavens are higher than the earth, so are my ways higher than your ways and my thoughts higher than your thoughts (Isaiah 55:8-9).

Many religions teach that love is God. But the God of our Bible shares his love with us. The Lord has appeared to me since ancient times. Yes, I have loved you with eternal love; 
Therefore, I have drawn you out of mercy. Because I will bind you again, you will be bound, says the Lord (Jeremiah 31:3-4).




Such a God is calling you. He is asking you to worship him. He is asking you to walk in his ways. Will you heed his call?



Prayer:


God, I admire Your glory, wisdom, power, truth, and holiness. Help me to grow in the knowledge of You and become like Your Son.

சிலர் கடவுள் புலனறிவுக்கு அப்பாற்பட்டவர்,அதனால் அவரை மனித வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என்று சொல்லுகிறார்கள்.வேறு சிலர் எப்படி வேண்டுமானாலும் கடவுள் இருக்கலாம், அவர் யாராகவும் இருக்கலாம் என்று அவரை நடைமுறை வாழ்க்கைக்குரிய ஒரு சாதாரண மனிதராக நினைக்கிறார்கள்.ஆனால் வேதாகமம் கடவுளை விவரிக்கும் விதத்தைப் பார்க்கும் பொழுது, அவர் புலனறிவுக்கு அப்பாற்பட்டவர் என்பதும் அதே சமயம் அவர் ஒரு சாதாரண மனிதரைப் போல நம்முடைய வாழ்க்கையில் ஈடுபடுபவர் என்பதும் சந்தேகத்திற்கிடமின்றி விளங்குகிறது.


வேதாகமம் தேவனை இவ்வளவு தெள்ளத் தெளிவாக விளக்குவதன் காரணம் என்ன? மக்கள் தாங்கள் எப்படி கடவுள்களாக மாற வேண்டும் என்று தெரிந்து கொள்ள முயற்சிக்காமல் தாங்கள் எப்படி ஒரு தெய்வீக வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.இதுதான் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்.கடவுள் புலனறிவுக்கு அப்பாற்பட்டவர் என்று மக்கள் நினைக்கும் பொழுது நாம் வாழ்வதற்கு மிகவும் அவசியமான சத்தியம், புனிதத்தன்மை மற்றும் அன்பு ஆகியவற்றின் முன்மாதிரியாக அவரைப் பார்க்க வழியில்லை.ஆனால் அதே சமயம், கடவுள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று நினைத்தால் அவர்களுடைய நம்பிக்கை சிதற அதிகமாக வாய்ப்பு இருக்கிறது.

ஒரு கிராமத்தில் ஒரு கல்லை பலரும் வழிபட்டு வந்தனர்.அதற்கென்று எந்தப் பெயரும் வைக்கவில்லை.ஒருநாள் ஒரு காகம் அந்தக் கல்லின் மேல் எச்சம் போட்டு விட்டது.அதற்குப் பொறுப்பாயிருந்த பூசாரிக்குப் பெருத்த ஏமாற்றமாகி விட்டது.ஏனென்றால் அவர் வணங்கிய கல்,அந்தக் காகத்திற்கு முன்னால் வலிமையற்றுக் காணப்பட்டது.அதனால் அவர் நம்பிக்கை இழந்து விட்டார்.அந்தக் கல்லைத் தூர எறிந்து விட்டார்.

நல்ல வேளை நம் வேதாகமத்தின் தேவன் மர்மங்களின் குவியலின் கீழ் புதைக்கப்படவில்லை.பத்துக்கற்பனைகளை இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்த உடனேயே கர்த்தர் மோசேக்கும்,அவனோடே வந்த இஸ்ரவேலருடைய மூப்பருக்கும் தம்முடைய மகிமையையும் வல்லமையும் வெளிப்படுத்தினார் (யாத்திராகமம் 24). இப்படி அவர்களுக்குத் தரிசனம் கொடுத்ததன் மூலம் தேவன் மக்களுக்குச் சொல்ல விரும்புவது என்னவென்றால், நான் யார் என்று பாருங்கள், நான் சொல்வதைச் செய்யுங்கள்.நன்கு வரையறுக்கப்பட்ட குணநலன்களைக் கொண்ட ஒரு கடவுளால் மட்டுமே இப்படிச் சொல்ல முடியும்.நாம் பரிசுத்தமாயிருக்க வேண்டும் என்று தேவன் நமக்குக் கட்டளையிடுகிறார்.உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர் ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று சொல்லுகிறார் (லேவியராகமம்19:2).தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகளாக இருப்பதினால் (வெளிப்படுத்தல் 15:3).நியாயம் தண்ணீரைப் போலவும் நீதி வற்றாத நதியைப் போலவும் புரண்டு வரக்கடவது (ஆமோஸ் 5:24). என்று அவர் நமக்கு அறிவுறுத்துகிறார்.தேவன் மேலும் சொல்லுகிறார் என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.பூமியைப் பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ அப்படியே உங்கள் வழிகளைப் பார்க்கிலும் என் வழிகளும் உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது (ஏசாயா 55:8-9).அன்பே கடவுள் என்று பல மதங்கள் கற்பிக்கின்றன.ஆனால் நம் வேதாகமத்தின் தேவன் தம்முடைய அன்பை நம்மோடு பகிர்ந்து கொள்ளுகிறார்.பூர்வகாலமுதல் கர்த்தர் எனக்குத் தரிசனையானார் என்பாய்.ஆம் அநாதி சிநேகத்தால் உன்னை சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக் கொண்டேன்.மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன்,நீ கட்டப்படுவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமியா31:3-4).


இப்படிப்பட்ட தேவன் உங்களை அழைக்கிறார்.அவரைத் தொழுது கொள்ளச் சொல்கிறார்.அவர் வழிகளில் நடக்கச் சொல்லுகிறார்.அவர் அழைப்புக்குச் செவி கொடுப்பார்களா?

ஜெபம்:
தேவனே, உம்முடைய மகிமை, ஞானம்,வல்லமை, சத்தியம், பரிசுத்தம் இவைகளை நான் போற்றுகிறேன்.உம்மைப் பற்றிய அறிவில் வளரவும்,உம் குமாரனைப் போலவே மாறவும் எனக்கு உதவி செய்யும்.



Post a Comment

0 Comments