விசுவாசம் உயிரோட்டமுள்ளதாய் இருக்கிறது (வாழ்வு தரும் வார்த்தை)
வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறிய வேண்டுமோ?
யாக்கோபு 2:20
விசுவாசம் உயிருள்ளதாகவும் இருக்கலாம் அல்லது செத்ததாகவும் இருக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?செத்த விசுவாசத்தால் எந்த பயனும் இல்லை.நம்மில் அநேகர் இன்று தேவனை விசுவாசிக்கிறோம்.ஆனால் தடைகளை மேற்கொள்ள முடிவதில்லை.
அதற்கான ஒரு எளிமையான காரணம் இதுதான்.,.
நம்முடைய விசுவாசத்திற்குப் பின்னால் நாம் எந்த கிரியையும் செய்வதில்லை.நம்முடைய விசுவாசம் செத்த விசுவாசமாய் இருக்கிறது.அவ்வளவுதான்..
இன்று நம்முடைய விசுவாசத்தை எப்படி உயிரோட்டமுள்ளதாய் காத்துக்கொள்ள முடியும்?அது அப்படி ஒன்றும் பெரிய விஷயம் இல்லை..
நாம் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து நம்மால் முடிந்த அளவுக்கு அவருடைய பிள்ளைகளாய் இருந்தால் மட்டுமே போதும்... நம்முடைய விசுவாசத்தை உயிரோட்டமுள்ளதாய் காத்துக்கொள்ள முடியும்...
நாம் மனச்சோர்வுக்குள்ளாகும் பொழுது நம்முடைய முகத்தில் சோர்வைக் காட்டாமல் மன மகிழ்ச்சியுடன் இருந்தாலே அதுவும் விசுவாசத்தின் கிரியையாகத்தான் இருக்கிறது.அதே போல ஆலயத்திற்கு செல்வதற்கான நேரத்தை ஒதுக்குங்கள்.இதுவும் உயிரோட்டமுள்ள விசுவாசத்தின் கிரியையாகத்தான் இருக்கிறது.
அந்த விசுவாசம் தேவனுடைய வல்லமையை முடுக்கி விடுகிறது.அந்த விசுவாசம் நம் சார்பில் தேவனுடைய சார்பில் கிரியை செய்யும்படி தேவனுக்கு கதவை திறந்து விடுகிறது.
அப்படிப்பட்ட உயிரோட்டமுள்ள விசுவாசத்தோடு நாம் உயரே செல்ல முடியும்.நம்மால் தடைகளை மேற்கொள்ள முடியும்.
நமக்கென்று தேவன் ஆயத்தம் செய்து வைத்திருக்கிற ஆசிர்வாதம் மற்றும் வெற்றிக்குள் நுழைந்து நாம் முன்னேறிச் செல்ல முடியும்..
பிதாவாகிய தேவனே ,
என்னுடைய ஆத்துமாவிற்கு ஜீவனாய் இருக்கிற உம்முடைய வசனத்திற்காக உமக்கு நன்றி !
என்னுடைய விசுவாசத்தை கிரியைகளாக மாற்றும் வழிகளை எனக்குக் காண்பியும் என்னை வழிநடத்தும் என்னை உமக்கு நெருக்கமாக வைத்துக் கொள்ளும்.அப்பொழுது நான் செய்கிற ஒவ்வொரு காரியமும் உமக்கு கனத்தையும் மகிமையையும் கொண்டு வரும் .
இயேசுவின் நாமத்தில் ,..
ஆமென் !,..
0 Comments
Thank you for visit my page 🙏